யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில், போயா தினமாகிய இன்றைய தினம் பொலிசாரால் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரரின் ஏற்பாட்டில், யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தனர். இரத்ததான நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.