யாழ்ப்பாணம் நவாலியில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

0
10

சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நவாலியில் நேற்று இடம்பெற்றது.
நிகழ்வின் தலைவர் பகீரதன் தலைமையில் நேற்று மாலை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மலேசியாவில் இடம்பெற்ற விவாதப் போட்டியில் சாதித்த மோகனராஜா ஹரிகரன், நகுலகுமார் அபிராமி, கலைச்செல்வன் ஜீலியட், சிவகுமார் திசான் ஆகியோhர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், கலைஞாயிறு விருது பெற்றோர் கௌரவிக்ப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன், யாழ். பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஏ.சி.தவறஞ்சித் மன்னார் கட்டட திணைக்கள பிரதம பொறியியலாளர் க.கணேசமூர்த்தி, அதிபர்கள், ஆசியர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.