யாழ்ப்பாணம், வசந்தபுரம், நாவாந்துறையில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிக்கு பாராட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
வெண்கரம் அமைப்பின் ‘கல்விக்கு கரம் கொடுப்போம் ‘ செயற்திட்டத்துடன், நாவாந்துறை – அண்ணா சனசமூக நிலையமும் இணைந்து குறித்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
வசந்தபுரம் – அண்ணா சனசமூக நிலைய முன்றலில் அண்ணா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. பன்னீர்ச்செல்வம் தனஞ்சயன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில், வெண்கரம் அமைப்பின் முதன்மைச் செயற்பாட்டாளர் திரு. மு.கோமகன் , அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்களான, ஆசிரிய ஆலோசகர் சுகுணராணி சன்முகேந்திரன், சங்கானை சிவப்பிரகாசா மகாவித்தியாலய முதல்வர் திரு.இ.சிறீதரன், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி சாந்தினிதேவி ஜீவதரன்,
நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலய முதல்வர் திரு செ. அன்ரன் செல்வநாயகம், யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலய முதல்வர் திரு. எஸ்.தவராசா நித்திய ஒளி முன்பள்ளி ஆசிரியர் திருமதி. சு.தபேந்திராதேவி மற்றும் வசந்தபுரம் பிரதேச கிராம அலுவலர் திரு. எஸ். ரமணன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்