யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவ கற்கைகள் முதுமானி இரண்டாம் அணி மாணவர்களின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
கிறிஸ்தவ கற்கைகள் முதுமானி வளாகத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
கலாநிதி போல்றொகான் தலைமையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.
இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூரும் முகமாக இயேசு பாலனுக்கு ஒளியேற்றலோடு கிறிஸ்தவ கீதங்கள் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டுக்கள், போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சிறப்புரையும் இடம்பெற்றது.
போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஒளிவிழா நிகழ்வில் கிறிஸ்தவ கற்கைகள் பீட முதுமானி மாணவர்கள், விரிவுரையாளர்கள் கிறிஸ்தவ மதகுருமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.