யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி மாயம்!

0
166
Missing red rubber stamp vector isolated

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அவரது தொலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் சென்றுள்ளனர்.
விடுதியில் பெற்றோர் விசாரித்த போது, மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.