யாழ்ப்பாண மக்கள் பூஸ்டர் தடுப்பூசி யினை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுங்கள்! யாழ் மாவட்ட இராணுவ தளபதி.

0
198

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி யினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார் இன்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

 தற்போது நாட்டில்  கொரோனா பரவல்  அதிகரிக்கின்ற நிலையில் மக்கள் அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் மூலம் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஏற்கனவே ராணுவம் மற்றும் சுகாதாரப் பிரிவினரால்  மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி யாழ்ப்பாண மாவட்டம் முழுவதிலும் பரவலாக பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 
அத்தோடு பொதுமக்களுக்கு  மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலுக்குரிய சகல உதவிகளும் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகிறது
 எனவே பொதுமக்கள் தயக்கமின்றி திருமதி பிரதேசத்தினை தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டுமாயின்   மூன்றாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதால் தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்