யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சியை நிறுத்த மாநகர சபையினால் அழுத்தம்!

0
124

யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சியினை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணமாநகர சபையினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் தெரிவித்தார் 

யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் முதல் ஆரம்பமாகி  இடம்பெறவுள்ள நிலையில் அதனை நிறுத்துவதற்கு யாழ்ப்பாண மாநகர சபை அதிகாரிகளினால்  முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது

 ஒரு கூடாரத்திற்குஒரு நாளுக்கு  செலுத்த வேண்டிய பணத்தினை தமக்கு செலுத்த மாறு கோரி அழுத்தம் பிரயோகிக்கப்படுவதோடு

 வர்த்தக  கண்காட்சியினை நிறுத்துவதற்கும் கடும் அழுத்தத்தினை யாழ்ப்பாண மாநகர சபை பிரயோகித்து வருகின்றது 

 ஒரு சமூக அக்கறையாக நாம் செயல் படுத்தும் இந்த வர்த்தக கண்காட்சியினை  நிறுத்துவதற்கு யாழ் மாநகர சபை கடும் பிரியத் தனம் மேற்கொண்டு வருகின்றது 

குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநரிடம் இது தொடர்பில் கோரிக்கையினை முன் வைத்திருக்கின்றோம் எனினும் வடக்கு மாகாண ஆளுநரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் 

அது தவறினால் எதிர்வரும் காலத்தில் இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சி வேறு மாகாணங்களில் நடாத்த வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்