யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று கைது!

0
35

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று, 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிடேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டாரவுக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.