இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கொழும்பு மாநகரசபை முதல்வர் அடங்கிய குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க இன்று 11.30 மணிக்கு யாழ் ஆயர் ஜஸ்டின் பேனாட் அவர்களை ஞானப்பிரகாசத்தை சந்திப்பதற்காக ஏற்கனவே ஆயர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு முன்னேற்பாடு செய்யப்பட்ட நிலையில் மதியம் 12 மணி வரை இல்லத்திற்கு வருகை தராத நிலையில்
திடீரென யாழ் ஆயருடனான சந்திப்பினை இடைநிறுத்தியுள்ளார்
எனினும் சந்திப்பு இடை நிறுத்த பட்டமை தொடர்பில் யாழ் ஆயர் இல்லத்திற்கு தகவல் வழங்கப்படவில்லை கொழும்பு மாநகர முதல்வரை சந்திப்பதற்காக யாழ் ஆயர் தயாராக இருந்த நிலையில் யாழ் மாநகரசபையின் குறித்த பகுதி வட்டார உறுப்பினரை தொடர்பு கொண்டு வினவிய போதே சந்திப்பினை நிறுத்திவிட்டு ஒரு திருமண நிகழ்விற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.