யாழ்.காரைநகரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் மக்களால் மடக்கிப்பிடிப்பு

0
176

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கோவளம் பகுதியில் நேற்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று காரைநகர் கோவள பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை திருடியவேளை அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.