யாழ். குருநகரில் சோகம்: தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி, உயிரிழப்பு

0
170

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.

குருநகரைச் சேர்ந்த 10 வயதான ஜேசுதாஸ் அனோஜினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் 5ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்தபோது கடந்த 21ஆம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.

இதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.