யாழ். கொழும்புத்துறை சென் நொசாநியன் சனசமூக நிலையமும், செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த இரத்த தான நிகழ்வு ஆலய முகம்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான நிகழ்வு அமரர்களான யேசுதாஸ் சுசீடசன், ராஜேஸ்கண்ணா அனுஸ்ராஜ் ஆகியோரின் நினைவாக முன்னெடுக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரால் குருதி சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
குருதி தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் 25 இற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர்.