யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான, ஞானச்சுடர் 318 ஆவது இதழ் வெளியீடு, இன்று இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில், பேரவை உறுப்பினர் சிவநாதன் தலமையில், பஞ்சபுராண ஓதலுடன், நிகழ்வு ஆரம்பமானது.
தொடர்ந்து, செஞ்சொற் செல்வர் இரா. செல்வவடிவேல் வெளியீட்டுரை நிகழ்த்திய பின்னர், மதிப்பீட்டு உரையை ஆசிரியர் கந்தசாமி கைலநாதன் நிகழத்தினார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம அடியவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
