யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபரொருவரே நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்இ நேற்று (17-08-2024) திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் இ யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.