யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை வீதியின் சுன்னாகம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து இடம்பெற்றதுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரது காற்பாதம் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கிய நிலையில் பாதம் துண்டானது.
விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.