யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் ஏற்பாட்டில் புண்ணிய நாச்சி அம்மையார் நினைவு தின விழா நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் அலுவலகத்தில் சபையின் தலைவர் வி.சிறிசக்திவேல் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது புதிதாக அமைக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் திருவுருவச் சிலையை கலாநிதி ஆறுதிருமுருகன் திறந்துவைத்தார்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
சைவ பரிபாலன சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்து சாதனம் எனும் நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந் நூலினை சபையின் தலைவர் வெளியிட்டுவைக்க முதற் பிரதியை ஆறுதிருமுருகன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் சைவபரிபாலன சபையின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


