யாழ் தீவகம் வங்களாவடி பகுதியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.யாழ் தீவகம் வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர் வாரத்தின் நான்காம் நாளாகிய இன்று, யாழ் தீவகம் வங்களாவடி சந்தையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர்கள் நினைவு கூறப்பட்டனர்.நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.இந் நிகழ்வில் மாவிரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், வேலணை பகுதி வர்த்தகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.