

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 282 பேருக்கு 12 லட்சத்து 32 ஆயிரத்து 820 கிலோ அரிசி வழங்கப்பட உள்ள நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரத்து 476 நபர்களுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 760 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றைய நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, உதவி பிரதேச செயலாளர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.