யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள நலம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் முகமாக குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் நடைபவனியும் நாடக ஆற்றுகையும் இன்று இடம்பெற்றது.
நடைபவனி தெல்லிப்பழை பொலிஸ் நிலைய முன்றலில் ஆரம்பமாகி தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை வரை நடைபெற்றது.
நடைபவனியின் பின்னர் உளநல நாடக ஆற்றுகை தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
உளநல பாதிப்பு ஏற்படுவது எப்படி, இது தொடர்பான விழிப்புணர்வை பெற்று மீள்வது எவ்வாறு என்பது தொடர்பாக நாடக ஆற்றுகை இடம்பெற்றது.
நிகழ்வில் சட்ட உதவி ஆணைக்குழுவின் மல்லாகம் பிராந்திய பணிப்பாளர் சட்டத்தரணி சிறி சண்முகன் கோகுலன், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் பிராந்திய நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் தினேஷ் சந்துரு, தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர், தெல்லிப்பழை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர், டபிள்யூ.எம்.உதயபால, சட்ட குடும்ப புனர் வாழ்வு நிலையத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



