யாழ் நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளன அதனை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரனையில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கிய நகரம் என்ற தலைப்பில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்
இடம் பெற்றபோது கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதுள்ள யாழ் மாநகர முதல்வர் ஆணையாளரினால் யாழ்ப்பாண நகரில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனினும் யாழ்நகரில் அதிகாலையில் நடைபயிற்சி செயல் போர் தெருநாய்களின் தொல்லைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில் காலை வேளைகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறதெ. தெரு நாய்கள் மக்களுக்கு கடிக்கும் அதேபோல வீதிகளையும் அசிங்கப்படுத்தும் நிலை காணப்படுகின்றது க வெளிநாடுகளில் நாய்களை மக்கள் கொண்டு சென்று அதன் கழிவுகளையும் தாங்களே அகற்றிசெல்வார்கள் ஆனால் அந்த நிலை இங்கே இல்லை
முதலில் நாய் வளர்ப்போர் அந்த நாய்களை மாநகரசபையில் பதிவு செய்து வளர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை யாழ் மாநகர சபை முன்னெடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.