யாழ்  நகரில் வீடுஉடைத்து 13 பவுண் நகை திருடியவர் கைது!

0
129

யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத  நேரம் 23 லட்சம் பெறுமதியான  நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா  பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது

யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் அவர்களின் வழிகாட்டுதலில்  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி  இந்திக்க தலைமையிலான அணியினர் குறித்த திருட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை  கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட 23 லட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் நகையினையும் 2 லட்சம் ரூபாய் பணத்தினையும் மீட்டுள்ளனர்,

கொட்டடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.