யாழ் நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நாளை திறந்து வைக்கப்படவுள்ளது!

0
100

மனித வாழ்வியலின் தத்துவங்கள் அத்தனையும் 1330 குறட்பாக்களுக்குள் உள்ளடக்கி உலகப் பொதுமறை நூலாக விளங்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்திற்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பெற்ற மேற்படி சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையினை சொஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் அவர்கள் தீரைநீக்கம் செய்து வைப்பார்.