யாழ். நாவாந்துறையில் மின் ஒழுக்கினால் வீட்டில் தீப்பரவல்

0
82

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில், மின் ஒழுக்கு காரணமாக, வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேளை, வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இன்று காலை, வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள், மின்சாரத்தை நிறுத்திவிட்டு, நீரைக் கொண்டு, தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவலில், வீட்டின் கூரை, கட்டில் இரண்டு, தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி மற்றும் ஏனைய உபகரணங்கள் எரிந்ததினால், 10 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பான பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.