யாழ். நெடுந்தீவில் உள்ள போக்குவரத்து குறைபாடுகள் தொடர்பில் மக்கள் விசனம்

0
287

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடல் போக்குவரத்துக்களில் தொடர்ந்தும் நெருக்கடி நிலவி வருவதுடன், நெடுந்தீவு பிரதேசத்தின் மேற்கு, முதலாம் வட்டாரம், கிழக்கு மத்தி ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கான போக்குவரத்து சேவைகளும் சீராக இடம்பெறுவதில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதிகள் சீரின்மை காரணமாக சில பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக நடைபெறுவதில்லை எனவும், திருலிங்கபுரம் கிராமத்தில் 65 வரையான குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்ட நிலையில், வீதிகள் சீரின்மை, போக்குவரத்த வசதி இன்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மையால் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சியுள்ள குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், அடிப்படை வசதிகளை செய்துதருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.