யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பேராசிரியர் சி.ரகுராம் காலத்தின் தேவை எனவும் அவரின் நியமனத்திற்கு பின் கலைப்பீடம் உச்ச வளர்ச்சி அடைந்ததாகவும் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.