யாழ். பல்கலை மாணவிகள் மோதல்! – ஒருவர் வைத்தியசாலையில்

0
218

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இரு மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவைச் சேர்ந்த மாணவி ஒருவரும், மருத்துவபீடத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், கலைப்பீட மாணவி ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதால் தனது கற்றலுக்கு இடையூறாக இருக்கின்றது என மருத்துவபீட மாணவி பல தடவைகள் சொல்லிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு கலைப்பீட மாணவி அதிக நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது மருத்துவபீட மாணவி இரண்டு, மூன்று தடவைகள் தனது கற்றலுக்கு இடையூறாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியபோதும், கலைப்பீட மாணவி அதனைப் பொருட்படுத்தவில்லை.

கோபமடைந்த மருத்துவபீட மாணவி தன்னுடைய தொலைபேசியைக் கலைப்பீட மாணவியின் முகத்தில் எறிந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் நண்பர்களின் தலையீட்டால் சமரசம் செய்யப்பட்டது. எனினும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த கலைப்பீட மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.