யாழ். பிறவுண் வீதி சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதி விபத்து(VIDEO)

0
32

யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதி விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.பிறவுண் வீதி சந்தியில் நேற்று மாலை விபத்து சம்பவித்துள்ளது.முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துள்ளான நிலையில் வீதியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளொன்று மீதும் முச்சக்கர வண்டி மோதியது.

இந்த விபத்தில் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் இச் சம்பவம் தொடர்பான சீ.சீ.ரீ.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.மேலும் இச் சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதிவிபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் நான்கு சந்திகளாக உள்ள குறித்த பகுதியில் வீதிச் சமிக்ஞை பொருத்தப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.