யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை – பொலிகண்டிப் பகுதியில் 75 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்ட போதே கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னாரிலிருந்து குருநாகல் பகுதிக்கு 115 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளைச் சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை இந்தியாவிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.