யாழ். போதனா பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தாவின் இரட்டைப் புதல்வர்கள் உயர்தரப் பரீட்சையில்; சாதனை

0
137

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் உயிரியல் பிரிவில், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.ஜமுனானந்தாவின் இரட்டைப் புதல்வர்கள் சாதனை படைத்துள்ளனர்.

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களான இருவரும் உயிரியலில் 3-ஏ சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில 1ஆம், 2ஆம் இடங்களையும், தேசிய ரீதியில் 3ஆம், 5ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.ஜமுனானந்தா பிரணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 03ஆம் இடத்தையும் பெற்றுள்ளதுடன், ஜமுனானந்தா சரவணன் மாவட்ட மட்டத்தில் 02ஆம் இடத்தையும் தேசிய ரீதியில் 05ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.