28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்! பிரதி பணிப்பாளர் தகவல்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும்இடை நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா தெரிவித்தார்

யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் போதனா வைத்தியசாலை யினை பொறுத்தவரை நோயாளர்களின்  சிகிச்சைக்குரிய மருந்து மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கான மருந்துகளுக்கும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 

தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில்  அத்தியாவசியமாக தேவையான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது

 ஏனைய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அத்துடன் விசர்நாய் கடிக்கான மருந்து தட்டுப்பாடாக இருக்கிறது எனவே பொதுமக்கள் கவனமாக மிருகங்களிடம்  கடிபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் 

ஏனெனில்  விசர் நாய்க்கடி மருந்து என்பது ஒரு விலை உயர்ந்த மருந்து தாகும் எனவே அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் விபத்துக்கள் மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் மூலம்வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் கோருகின்றோம்

 போதுமான அளவு சேவையினை வழங்க முடியாதுள்ளது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

 சுகாதார கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் தெரிவித்தார்…

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகள் வடக்கில் இல்லை; நாய்க்கடிக்குள்ளாகுவோருக்கு ஆபத்து

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாய்களைக் கண்டால் விலகிச் செலலுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏஆர்பி மற்றும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles