யாழ் மாநகரத்தை ஆரோக்கியமான நகரமாக மாற்றுவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகரத்தை ஆரோக்கியமான நகரமாக மாற்றுவது தொடர்பில் ஆராயும் முக்கிய கலந்துரையாடல் யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது .குறித்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாநகரத்தினை ஆரோக்கியமான நகரமாக மாற்றுவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் வைத்தியர்கள் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் யாழ் நகரத்தை உலகத்தினுடைய தலைசிறந்த நகரங்களுக்கு இணையாக அதனுடைய சுகாதாரத்தையும் தூய்மையையும் உருவாக்குகின்ற நோக்கத்தோடு இந்த கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது
இந்ததிட்டமாக உலகம் முழுவதும் உலக சுகாதார நிறுவனத்தினால் முன்னெடுக்க படுகின்றது இந்த திட்டத்தில் உலகத்திலேயே பல்வேறு நகரங்கள் பங்காற்றி வருகின்றது உலக சுகாதார நிறுவன மானது ஒரு குறித்த நகரத்தினை ஆரோக்கியமான நகரமாக பிரகடனப்படுத்தும் போது அதனுடைய தரம் நிர்ணயிக்கப்படுகின்றது
அந்த வகையில் இலங்கையில் இந்த திட்டத்தில் பங்கு பெறுகின்ற ஒரே ஒரு நகரம் எமது யாழ் நகரமே .. உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்துஇ ஆரோக்கிய நகரம் என சான்றிதழ் பெறுவதற்கு போராடி வருகின்றோம் எனவே அனைவரும் ஆரோக்கியமான நகரமாக மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் தெரிவித்தார்.