யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட கல்வியங்காடு, கொட்டடி, குருநகர், நாவாந்துறை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 34 ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று காலை மாடு, ஆடுகளை வெட்டுவதற்கான கொல் களத்திற்கு விளம்பர பலகை காண்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி பொலிசாரினால் குறித்த கொள்கலன் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது வாழ்வாதாரம் இன்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு யாழ் மாநகர சபை முதல்வர், ஆணையாளர் தமக்குரிய நஷ்டஈட்டினை வழங்க வேண்டும் எனவும் அத்தோடு குறித்த கொள்கலம் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியும் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த போராட்டத்திற்கு இன்றையதினம் முடிவு கிடைக்காவிடின் நாளையதினம் ஆளுநரை சந்தித்து தமது பிரச்சினையை தெரியபப்படுத்த வுள்ளதாகவும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.