யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாய் வளர்ப்போர் கட்டாயமாக நாய்களை பதிவு செய்யும் நடைமுறை விரைவில் அமெல்படுத்தப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார்
இன்றைய தினம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில்யாழ் ஆரோக்கிய நகரம் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் போது வாழ்நாள் பேராசிரியர் பொ பாலசுந்தரம்பிள்ளை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாய்களை கட்டுப்படுத்துவதில் யாழ் மாநகர சபைபிரச்சினையை எதிர்நோக்குகிறது அதாவது தெருநாய்களை மாநகரசபை பிடித்து கொல்ல கொள்ள முடியாது அதே போல அவற்றை வைத்து பராமரிக்கக் கூடிய சிறந்த இடங்களும் தற்போதைய நிலையில் இல்லை ஆனால் நாங்கள் தற்பொழுது ஒரு நடைமுறையினைஏற்படுத்தவுள்ளோம் வீட்டில் நாய்களை வளர்ப்போர் கட்டாயமாக மாநகரசபையில் அதற்குரிய அனுமதிப்பத்திரத்தை பெற்று வளர்க்க வேண்டும் அதேபோல் எதிர்வரும் நாட்களில் தெருவில் உள்ள நாய்களை பிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளளோடு நாய்க்கு உரியவர்கள் இல்லதவிடத்து நாய்கள் சரணாலயத்திற்கு அனுப்பும்நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.