யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில் கோரம் இல்லாததால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால், முதல்வர் வி.மணிவண்ணன் பதவியில் இருந்து விலகியநிலையில், புதிய முதல்வர் தெரிவு
இடம்பெறவிருந்தது.
எனினும் முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பை ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, மணிவண்ணன் அணியினர் புறக்கணித்திருந்தநிலையில், கோரம் இல்லாமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.