யாழ்ப்பாண மாவட்டச் செயலராக அ.சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவ ருக்கான நியமனக் கடிதம்நேற்று கிடைக்கப்பெற்ற கிளையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவரது நியமனத்துக்கான அனுமதி வழங்கப்பட் டு அவருக்குரிய நியமன கடிதம் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்
யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய க.மகேசன், கடந்த முதலாம் திகதி முதல் பதவியுயர்வுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் செயலராகப் பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலராகப் பணியாற்றிய அ. சிவபாலசுந்தரன், யாழ். மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.