யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் யாழ் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்கு நோயின் தாக்கமானது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைந்தளவில் உள்ளது அதேபோல டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது
குறிப்பாக அண்மைய நாட்களில் டெங்கு நோயினால் இறப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது ராணுவ வீரர் ஒருவர் டெங்கு நோயினால் இறந்துள்ளார் எனினும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்,