யாழ்.மாவட்டத்தில் நெல்விதைப்பு ஆரம்பம்

0
124

யாழ்ப்பாணம் – செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு, விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை இடம்பெற்றது.

பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன், தமது வயல் நிலங்களை பண்படுத்தி, வரம்பு கட்டலிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.