யாழ் மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

0
463

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டு இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளைய தினம், (30) ஆரம்பமாக உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதன்போது தெரிவித்தார்.