யாழ் மாவட்ட செயலகவளாகத்தில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய ஏதுவான நிலை காணப்படுவதாக சற்று முன்னர் சுகாதாரப் பிரிவினரால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்டம் பூராகவும் சுகாதாரப் பிரிவினரால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் அன்றாட முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக வளாகம் சுகாதாரப் பிரிவினரால் பரிசோதனைக்கு ட்படுத்தப்பட்டது குறித்த பரிசோதனையின் போது யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படுகின்றமை இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நுளம்பு பரவும் இடங்களை துப்புரவு செய்யுமாறு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்பு உலக இடங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது,