யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் இருண்டு பிள்ளைகளின் பெற்றோரான 50 மற்றும் 51 வயதானவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.