யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்று இரவு வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலூட்டிக் கொண்டிருந்த தாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,
வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோரி, பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Home வடக்கு செய்திகள் யாழ். வட்டுக்கோட்டையில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் : பாலூட்டிக் கொண்டிருந்த தாய் மீதும் தாக்குதல்!