யாழ் வருகிறார் ஜனாதிபதி!

0
17

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.

அத்துடன், கிட்டு பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்து வரும் நாட்களில் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்களும் வருகை தரவுள்ளனர்.