யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை 3ஆம் வட்டார பகுதியில், மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் குறித்த சந்தேகநபர் 24 கால் போத்தல்கள் சாராயம் மற்றும் 06 பியர் போத்தல்கள் ஆகியவற்றை, புதருக்குள் வைத்து விற்பனை செய்தவேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.