ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0
143

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எலும்பியில் சிகிச்சை பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.