ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்திப்பு!

0
126

மன்னார் மாவட்டத்தில், இன்று, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு, சாள்ஸ் நிர்மலநாதனின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை இளைஞர் அணியினர் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுடன், ஜனாதிபதி கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் வினவிய போது,இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், ஜனாதிபதி தேர்தலில், ஒட்டுமொத்த மன்னார் மக்களின் முடிவே,தனது முடிவு எனவும், மக்கள் யார் பக்கமோ, அவர்களின் பக்கமே தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.