ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
தற்போது ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படு வருவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.