வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்கு மாணவர்கள் கைது

0
147

பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்தார்கள் என தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி மொழிக்கான பல்கலைக்கழகத்தில் கற்கும் பிக்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.