அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவுக்கு பெயர் தெரியாத கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில அத்தோ கடந்த 4ஆம் திகதி குறித்த கடிதத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. வசந்த முதலிகேவின் சகோதரர் நேற்று ஊடகங்களுக்கு இந்தக் கடிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.