28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கின் ‘அபயம்’ குறைகேள் வலையமைப்பு : நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு

வட மாகாணத்தின் ‘அபயம்’ வலையமைப்பினால் குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அபயம் வலையமைப்பிற்கு அறிவிப்பதன் மூலம் ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஊடகப்பிரிவு குறிப்பிட்டள்ளது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், சிறுவர், இளையோர் மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரச பொறிமுறையின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அவற்றுக்கான தீர்வுகளும் உடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அபயம் வலையமைப்பு செயற்படுவதுடன் வடக்கு மாகாணத்தின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தாலும், முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் முறைப்பாட்டாளர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் வட மாகாண ஊடகப்பிரிவு கூறியள்ளது.

070 666 66 77 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலமும், வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்பதோடு ‘அபயம் – ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்’ என்ற முகவரிக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆளுர் செயலகத்திற்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் கோரிக்கை மனுக்களை சமர்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles