கிளிநொச்சி – உதயநகர் வட்டாரத்தை சேர்ந்த 5 முன்பள்ளி மாணவர்களுக்கு, வாரத்தில் இரண்டு தடவைகள் சத்துணவு வழங்கப்பட்டது.கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜனின் ஏற்பாட்டில், உதயநகர் வட்டாரத்தை சேர்ந்த முன்பள்ளி பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு உதயநகர் கிழக்கு முன்பள்ளி வளாகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது 135 மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு தடவைகள் பாலும் முட்டையும் வழங்கப்படவுள்ளது.
உதயநகர் வட்டார பிரதேச சபை உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன், உதயநகர் வட்டாரத்திலுள்ள ஐந்து முன்பள்ளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு இந்த உதவியை வழங்கவுள்ளார்.நிகழ்வில் கிளிநொச்சி தெற்கு வலயத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள்,
கிராம சேவையாளர், மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.